ப்ரியமுடன் படம் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர். த்ரில்லர் கதைகளை கையாள்வதில் தேர்ந்தவரான இவர் இப்போது கையிலெடுத்திருப்பது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையை.
படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் – வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.
இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார் . எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோவை நடிகர் இளையதளபதி விஜய் மும்பையில் தலைவா படப்பிடிப்பின்போது வெளியிட்டார். இயக்குனர் வின்சென்ட் செல்வா, நாயகன் யுவராஜ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தயாரிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
எனக்கு வெற்றிப்படத்தைக் கொடுத்த உங்களுக்கு இந்த படம் பெரிய வெற்றியைத் தரட்டும் என இயக்குனர் வின்சென்ட் செல்வாவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் இளையதளபதி விஜய்.
No comments:
Post a Comment