Showing posts with label suresh raina. Show all posts
Showing posts with label suresh raina. Show all posts

Monday, 27 May 2013

Shruthihassan and Raina Secret Dinner Party


shruthihassan-rainaமும்பை இசைக் கலைஞர், நடிகர் சித்தார்த், பின்னர் நடிகர் தனுஷ் என பலருடன் நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்ட ஸ்ருதிஹாசன், இப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை அணி ஆடும் ஆட்டங்களின் போது பார்வையாளராக தவறாமல் பங்கேற்று கைத்தட்டி, ரசிகர்களைப் பார்த்து விசில் போடு என்றெல்லாம் உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த ஆண்டு விளையாட்டைப் பார்க்க வந்த ஸ்ருதியும் ரெய்னாவும் நண்பர்களாகப் பழக ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 52 பந்தில் 99 ரன்கள் விளாசினார். இந்த போட்டியைப் பார்க்க வந்த ஸ்ருதிஹாசன், பின்னர் இரவில் ரெய்னாவுடன் விருந்து சாப்பிட்டுள்ளார்.