Tuesday 9 July 2013

Why I m Composing Music at Night – AR Rahman

ar-rahman
சினி­மாவில் அறி­மு­க­மான காலத்­தி­லி­ருந்தே இரவில் இசை­ய­மைத்­து­விட்டு, மற்­ற­வர்கள் எழுந்­தி­ருக்கும் நேரத்தில் உறங்கச் செல்­ப­வ­ராக அறி­யப்­பட்­டவர் இசைப்­புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஏன் அவர் அப்­படி செய்­கிறார் என்­ப­தற்கு அண்­மையில் அளித்­துள்ள செவ்­வி­யொன்றில் ரஹ்மான் விளக்­க­ம­ளித்­துள்ளார்.
தனது மனை­வி­யு­ட­னான திரு­ம­ணத்­துக்கு முந்­தைய உடன்­பாடு, மைக்கல் ஜக்­ஸ­னு­ட­னான சந்­திப்­புகள், நிறை­வே­றாத ஆசை என்­பன குறித்து அச்­செவ்­வியில் மனந்­தி­றந்து பேசி­யுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
உங்­க­ளுக்கு இசை­யுடன் தொடர்­பி­ருக்­கி­றது என்­பதை நீங்கள் எப்­படி உணர்ந்­து­கொண்­டீர்கள்?
அதை முதலில் உணர்ந்­தவர் எனது தாய்தான் (கஸ்­தூரி சேகர்) நானல்ல. எனது தந்தை இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­கான ஏற்­பாட்­டா­ள­ரா­கவும் அவர்­களில் பல­ருக்கு உத­வி­யா­ள­ரா­கவும் இருந்தார்.
அந்த காலத்தில் இசை­ய­மைப்­பா­ளர்கள் கர்­நா­டக சங்­கீதக் கலை­ஞர்கள். அவர்கள் டியூன்களை எழுத, எனது தந்தை இசைக்கு ஏற்­பாடு செய்வார். அவர் ஒரு சம­யத்தில் எட்டு இசை­ய­மைப்­பா­ளர்­க­ளிடம் பணி­யாற்­றினார். பகல் இர­வாக அவர் பணி­யாற்­றினார். எனக்கு 9 வய­தாக இருக்­கும்­போது அவர் உயி­ரி­ழந்தார்.
எனது தந்தை இறந்­தபின் 5 வரு­டங்கள் வரை தந்­தையின் இசைக்­க­ரு­வி­களை வாட­கைக்கு விட்டே எனது தாயார் குடும்­பத்தை நடத்­தினார். இசைக்­க­ரு­வி­களை விற்­று­விட்டு அப்­ப­ணத்தின் மூலம் கிடைக்கும் வட்­டியைக் கொண்டு குடும்­பத்தை நடத்­தலாம் என பலர் ஆலோ­சனை கூறினார். ஆனால் அவர் அதற்கு மறுத்­து­விட்டார். “இல்லை. எனக்கு ஒரு மகன் இருக்­கிறான் அவன் பார்த்­துக்­கொள்வான்” என அவர் கூறினார்.
அவ­ருக்கு இசை உள்­ளு­ணர்வு இருந்­தது. ஆன்­மிக ரீதியில், சிந்­தித்தல் தீர்­மானம் மேற்­கொள்­வதில் அவர் என்­னை­விட உயர்­வாக இருந்தார். உதா­ர­ண­மாக, இசைத்­து­றையில் என்னை ஈடு­பட வைப்­ப­தற்கு தீர்­மா­னித்­தவர் அவர்தான்.
நான் பதி­னோராம் வகுப்பு படித்­துக்கொண்டிருந்­த­போது எனது தாயார் என்னை பாட­சா­லை­யி­லி­ருந்து விலக்கி இசைத்­து­றையில் ஈடு­பட வைத்தார். இசைதான் எனது பாதை என நிர்­ண­யித்­தவர் அவர்தான்.
உங்கள் கல்­வியை நிறுத்­தி­ய­மைக்­காக தாயா­ருடன் முரண்­பாடு கொண்­டீர்­களா?
அந்த காலத்தில் சமூ­கத்தின் பார்­வையில் ஒருவர் கல்வி கற்­கா­விட்டால் அவ­ருக்கு வாழ்க்­கை­யில்லை, அவர் டெக்ஸி அல்­லது ரிக்ஷா சார­தி­யா­கத்தான் ஆக முடியும். எனவே இயற்­கை­யாக அந்த வேளையில் நான் மிக நொந்­து­போனேன்.
சில வருடங்களில் பணம் சம்­பா­தித்­துக்­கொண்டு எனது கல்­வியை பூர்த்தி செய்ய வேண்டும் என நான் எண்­ணினேன். ஆனால், வாழ்க்­கை­யி­லி­ருந்து கற்­றுக்­கொண்டு உங்­களை ஒரு நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தா­னது கல்­லூரி படிப்­பை­விட அதிகம் கற்­றுக்­கொண்­டுக்­கி­றது என்­பதை நான் சிறி­த­ளவு உணர்ந்­தி­ருந்தேன்.
கல்வி என்­பது மோச­மா­ன­தல்ல. ஆனால் இதுதான் அறி­வுக்கும் ஞானத்­துக்கும் உள்ள வித்­தி­யாசம். ஞானம் என்­பது உள்­ளி­ருந்து வரு­கி­றது. அறிவு முயன்று பெறு­வது. அது சில­வேளை உங்கள் ஞானத்தில் ஒரு திரையை ஏற்­ப­டுத்தும். இந்த நிறை­வே­றாமை கார­ண­மாக, வாழ்க்­கை­யி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற அவா எனக்கு தொடர்ச்­சி­யாக இருந்­தது.
ஆனால், நான் செய்த முத­லா­வது தொழில் ரமேஷ் நாயு­டு­விடம் இரண்­டா­வது கீபோர்ட் பிளே­ய­ராக பணி­யாற்­றி­ய­மையே. அதன் மூலம் கிடைத்த பணத்­தில்தான் நான் எனது சொந்த இசைக்­க­ரு­வி­களை வாங்­கினேன். பின்னர் அதுவே எனது எதிர்­கா­ல­மா­கி­யது.
உங்கள் தாயார் மீதான அன்பை நீங்கள் வெளிப்­ப­டுத்­து­கி­றீர்­களா?
பதில்: நாம் திரைப்­ப­டங்­களில் வரும் தாய் – மகன் போன்று கட்டித் தழு­விக்­கொள்­வதோ அவர் ‘என் மகனே….’ என்று கூறு­வதோ இல்லை. நான் ஒரு­போதும் அவரை அணைத்­துக்­கொண்­ட­தில்லை. ஹொலிவூட்டில் நான் அதை செய்தேன் என எண்­ணு­கிறேன். அங்கு அனை­வரும் அணைத்­துக்­கொள்­வார்கள். மேடையில் நீங்கள் அணைத்­து­கொள்­ளா­விட்டால் அது மூர்க்­க­மா­ன­தாக கரு­தப்­படும்.
உங்கள் தந்­தையை மிஸ் பண்­ணு­கி­றீர்­களா?
முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய தரு­ணங்­களில், உதா­ர­ண­மாக எனது தந்தை திரு­மணம் செய்­த­போது, அந்த பாத்­தி­ரத்தை வகிப்­பது எப்­படி என எனக்குத் தெரி­யா­ம­லி­ருந்­தது. தந்தை இல்­லாத நிலையில், தந்தை எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னவர் என்­பதை நான் அறிவேன்.
எனது பிள்­ளை­க­ளுடன் வெளி­நாடு செல்­லும்­போது நான் நானாக இருப்­ப­தில்லை. அவர்­களை பாது­காக்க விரும்பும் தந்­தை­யா­கவே இருப்பேன். சில­வே­ளை­க­ளில் நான் ஆவே­ச­மாக இருப்­ப­துண்டு. உதா­ர­ண­மாக, மக்கள் என்­னுடன் புகைப்­படம் எடுத்­துக்­கொள்ள விரும்­பினால் அதற்கு சம்­ம­திப்பேன். ஆனால் அவர்கள். (பிள்­ளைகள்) பொதுச்­சொத்து அல்ல.
ஏன் இரவு நேரத்தில் பணி­யாற்­று­கி­றீர்கள்?
அது எனக்கு வச­தி­யாக உள்­ளது. நான் ஐந்து வேளை தொழு­கிறேன். முத­லா­வது தொழுகை 5.30 மணிக்கு எனவே நான் 3 மணிக்கு உறங்க ஆரம்­பித்தால் அந்த வேளையில் எழுந்­தி­ருக்க முடி­யாது. எனவே எனது பணியை மேலும் 3 மணித்­தி­யா­லங்கள் நீடித்­துக்­கொண்டு அதி­கா­லையில் ‘நமாஸ்’ நிறை­வு­செய்­து­விட்டு உறங்கச் செல்­கிறேன்.
எனது கோபங்­களை நான் அதி­கா­லையில் சிறப்­பாக கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். காலையில் தொழும்­போது நான் சாந்­த­மாக இருப்பேன். “நீங்கள் இன்று கோப­மாக இருக்­கி­றீர்கள்? இன்று தொழவில்லையா­” என்று எனது மனைவி அடிக்­கடி கேட்பார்.
நீங்கள் இரவில் பணி­யாற்­று­வதை உங்கள் மனைவி எப்­படி அனு­ச­ரிக்­கிறார்?
பதில்: திரு­ம­ணத்­துக்கு முன்னர் நாம் உரை­யா­ட­லொன்றை நடத்­தினோம். அது இல்­லா­விட்டால் நீண்ட நாட்­க­ளுக்கு முன்­னரே நாம் பிரிந்­தி­ருப்போம். அந்த உரை­யா­ட­லின்­போது எனது நிலைப்­பாட்டை நான் அவ­ருக்கு விளக்­கினேன். நாம் இராப்­போ­சன நிகழ்­வொன்­றுக்கு திட்­ட­மிட்­டுள்ள நிலையில், பாட­லொன்று வந்தால் நாம் இராப்­போ­ச­னத்தை நிகழ்வை கைவிட வேண்­டி­யி­ருக்கும் என நான் கூறினேன்.
இசை உங்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும்­போது, உங்­களை தாழ்­வாக உணரச் செய்­வது எது?
ஒவ்­வொரு தட­வையும் பாட­லொன்­றுக்­காக அம­ரும்­போது நான் முடி­வ­டைந்­து­விட்­ட­தா­கவே உணர்­கிறேன். பிச்­சைப்­பாத்­திரம் ஏந்தி இறை­வ­னுக்­காக காத்­தி­ருக்கும் பிச்­சைக்­காரன் போல் அது இருக்கும். ஒவ்­வொரு பாட­லுக்கும் நான் அவ­ரிடம் உதவி கோருவேன். சுற்­றி­யி­ருப்­ப­வர்கள் அனை­வரும் மிகச் சிறந்­த­வர்கள். எனவே அனை­வ­ரையும் இணைக்கும் இசையை உந்­து­த­லின்றி மனித ஆற்­றலில் உரு­வாக்­கு­வது சாத்­தி­ய­மில்லை.
எப்­படி உங்கள் பணிவை பேணு­கி­றீர்கள்?
அது காரோட்­டு­வதைப் போன்­ற­துதான். நீங்கள் நெடுஞ்­சா­­லையில் அதி வேக­மாக சென்றால் கவிழ்ந்­து­வி­டு­வீர்கள். எனவே வேகத்தை கட்டுப்­பாட்டில் வைத்­திருப்­பது நல்­லது. வாழ்க்­கையும் அது­போ­லத்தான். அதுதான் உங்கள் தலையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி.
எந்த இயக்­கு­ந­ருடன் பணி­யாற்­றும்­போது மகிழ்ச்­சி­ய­டை­கி­றீர்கள்?
என்னை நம்­பு­வர்­க­ளுடன் பணி­யாற்­றும்­போது நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். அதி­க­மாக உங்­க­ளுடன் சண்­டை­யி­டும்­போது உங்கள் உள்­ளு­ணர்வு பல­வீ­ன­டைந்து, “நீங்­கள்தான் எனது எஜமான், நீங்கள் கூறுங்கள்” என சொல்லும் நிலைக்கு தள்­ளப்­ப­டு­வீர்கள். அது (அந்த இசை) அநாதைக் குழந்­தை­யா­கி­விடும்.
ஆனால் சில­வேளை, மற்­ற­வர்கள் உங்கள் சொகுசு வல­யத்­தி­லி­ருந்து உங்­களை வெளியே தள்­ளி­டும்­போது அது சில அழ­கி­ய­வற்றை உரு­வாக்­கலாம். நான் மகிழ்ச்­சி­யுடன் பணி­யாற்­றிய இயக்­கு­நர்கள் என்றால் மணி­ரத்திணம், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா, இம்­தியாஸ் அலி, சுபாஷ் கை, அஷுதோஷ் கோவா­ரிக்கர், ஆனந்த் எல். ராய்.
நீங்கள் எந்த நட்­சத்­தி­ர­த்தினதும் விசி­றி­யாக உள்­ளீர்­களா?
நிச்­ச­ய­மாக நான் ஒரு ரஜி­னிகாந்த் விசிறி. அவர் நம்பும் பல விட­யங்­களை நானும் நம்­பு­கிறேன். வாழ்க்­கை­யி­லி­ருந்து கற்­றுக்­கொள்­வது குறித்து அவ­ரி­ட­மி­ருந்­துதான் நான் கற்றேன்.
ஏதேனும் கவ­லைகள்?
மைக்கல் ஜக்­ஸ­னுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு நூலி­ழையில் தவ­ற­விட்­டது. அவரை சந்­திப்­ப­தற்கு மிகவும் விரும்­பினேன். இரு தட­வைகள் சந்­தித்­துள்ளேன். ஒரு தடவை ஒஸ்கார் விருது விழாவில் சந்­தித்தேன். மற்­றொரு தடவை அவரின் நண்­ப­ரான முகவர் ஒருவர் மூலம் சந்­தித்தேன்.
முதல் சந்­திப்­பா­னது அறி­மு­கமும் பரஸ்­பர மெச்­சுதல் சார்ந்­த­தாக இருந்­தது. அவ­ருடன் இருக்­கும்­போது இயல்­பாக இருப்­ப­தற்கே எனக்கு சற்று நேரம் எடுத்­தது. அவர் ஜெய் ஹோ பற்றி பேசி­ய­போது பெரும் மகிழ்ச்சி ஏற்­பட்­டது. இந்­தியா தான் நேசிப்­பது குறித்தும் தான் மீண்டும் வர விரும்­பு­வது குறித்தும் பேசினார். இரண்­டா­வது தடவை சந்­தித்­த­போ­துதான், “ஏ.ஆர்… வீ ஆர் த வேர்ல்ட் மாதிரி ஒரு பாடலைச் செய்வோம்” என்று கூறினார்.
இரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் நான் இரு மணித்­தி­யா­லங்கள் இருந்தேன். அவர் ஒரு குழந்தை போன்­றவர். திடீ­ரென எழுந்து அவரின் சில நட­னங்­களை ஆடிக்­காட்டி, “ஏ.ஆர்…, இப்­ப­டித்தான் எனது ஒவ்­வொரு நடன அசைவும் எனது இத­யத்­தி­லி­ருந்து வரு­கி­றது.” என்று கூறுவார்.
எனக்­கு முன் மின்னல் மாதிரி அவர் இருந்தார். நான் புகைப்­படம் எடுக்க விரும்­பினேன். நான் புகைப்­படம் எடுப்­பது எவ்­வ­ளவு எரிச்­ச­லூட்டும் என்­பதை உணர்ந்­தி­ருந்­ததால் நான் தயங்­கினேன். அவ­ருடன் மக்கள் இணை­வ­தற்கு நீண்­ட­காலம் எடுக்கும். ஏனெனில் அவ­ருக்­கி­டையில் அதி­க­மானோர் உள்­ளனர். ஆனால் நாம் 3, 4 தடவை தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ளோம். இரண்­டா­வது தடவை நான் அவரை சந்­தித்து ஒரு மாதத்தின்பின் அவர் இறந்துவிட்டார்.

No comments:

Post a Comment